லிம்பியா மூவில் சார்பில் எஸ். அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தயாரித் திருக்கும் "ஜிப்ஸி' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ்.கே. செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்தப் படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சே என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.

rajumurugan

பாடலாசிரியர் யுகபாரதி பேசும் போது, ""தம்பி ராஜு முருகனை நான் நல்லா வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவனோ என்னை உள்ளே வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான் என்று தான் சொல்லவேண்டும். அது இந்தப் படத்தில் நடைபெறுகிறதா? அல்லது அடுத்து வரும்படங்களில் நடைபெறவிருக்கிறதா என்று தெரிய வில்லை.

இந்தப் படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ்த் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர் களாலும் கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை. அதனை பல தடைகளையும் கடந்து தயாரித்த தற்காகவும், இந்தப் படம் இனிமேல் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலுக் காகவும், அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதற்காகவும் தயாரிப்பாளர் அம்பேத் குமார் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கி றேன். திட்டமிட்டதைவிட கூடுதலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அத்துடன் எங்களை யெல்லாம் ஜாமீனில் எடுக்கவேண்டிய செலவும் இருக்கிறது'' என கலகலப்பூட்டினர்.

""தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில், ""சொன்ன பட்ஜெட்டைவிட அதிகம் செலவாகியிருந்தாலும், "ஜோக்கர்' போன்ற படத்தை இயக்கிய இயக்குநர் படம் என்பதால் அதன் தரத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்தேன். இந்தப் படம் ஒலிம்பியா மூவிசுக்கு சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார்.

இயக்குநர் ராஜுமுருகன் பேசும் போது...

""தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர் கள் சம்மதிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை இந்த தரத்தில் தற்போது எடுத்திருக்க இயலாது.

அதற்காக அவருக்கு நன்றி.

இந்தப் படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம்.

என்னைப் பொருத்தவரை வாழ்க்கை யும் அரசியலும் வேறுவேறு அல்ல.

இந்தப் படத்திற்கு தோழர் சந்தோஷ் நாராயணன் இசை என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள் என கேட்டார்கள். தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை. தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றிவிட்டார்கள். யாரெல் லாம் நீதிக்காக போராடு கிறார்களோ அவர்களை யெல்லாம் தோழர் என்று அழைக்கலாம்'' என்றார் பெருமிதமாக.

நடிகர் ஜீவா பேசுகையில். ""ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித்திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார்.

அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது. என்று இந்தப் படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும்போதே எனக்குப் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது.கதையில் ஒரு உண்மை இருந்தது.

இந்தப் படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் என்னுடைய கலையுலகப் பயணத்தில் முக்கியமான படமாகவும் இருக்கும்'' என்றார்.